கும்பம் ராசி அன்பர்களே.! கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கின்றது.
இன்று உத்தியோக வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். உத்யோகத்திற்காக நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். அதிகாரிகளால் அனுபவமும் கிடைக்கும். ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். நல்ல மனிதர்களின் சந்திப்பு இருக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகின்றது. நல்ல நட்பினால் நல்ல பணத்தை காணமுடியும். புத்துணர்ச்சியுடன் செயலாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கின்றது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கடன் தொகையை வசூல் செய்யும்போது கோபங்கள் ஏற்பட வேண்டாம். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுடைய திட்டங்கள் செயல்பட்டுவிட்டால் சிறப்பாக இருக்கும். அதிகமான உழைப்பு இருக்கும்.
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனையாக இருந்த சூழல் படிப்படியாக குறைந்து மனநிம்மதி ஏற்படும். நெருக்கம் கூடி இன்பம் பெருகும். காதல் கைக்கூடி இன்பத்தில் முடியும். இன்று மாணவர்கள் எதையும் தைரியமாக செய்வார்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் இருக்கும். கல்வியில் உள்ள தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க்