ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கைவசப்படுதியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த சுழலில் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் வேகமாக கைவசப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையானது சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது ஏனெனில் ஆப்கானிஸ்தானுடன் 8 கிலோமீட்டர் எல்லையில் ஜின்ஜியாங் என்ற மாகணத்தை பகிர்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்கர் இன முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்து தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன என கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தியை அறிந்த தாலிபான்களின் செய்தித் தொடர்பாளரான சுஹைன் ஷாகீல் இதனை மறுத்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது “உய்கர் இன மக்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். சீனா தங்களின் நட்பு நாடு ஆகும். மேலும் ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்கும் பணிகளை குறித்து சீனாவுடன் கலந்துரையாட உள்ளோம்” என்று கூறியுள்ளார்.