Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலையில் கல் விழுந்ததால்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

பெண் தலையில் கல் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரணி தாங்கள் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செஞ்சி பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் கற்கள் ஆங்காங்கே சிதறின. இந்நிலையில் கல்குவாரியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் தலை மீது ஒரு பெரிய கல் விழுந்தது. இதனால் செல்வி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செல்வியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக செல்வியின் உடலை எடுக்க முயன்றபோது அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்த பின் செல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு காவல்துறையினர் செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |