Categories
மாநில செய்திகள்

ரூ 2,00,00,000 …”லஞ்சம் வாங்கிக்கோங்க”… ஸ்கெட்ச் போட்டு புடிச்ச CBI….!!

லட்சம் கொடுக்க வர செய்து CBI அதிகாரிகள் கையும் , களவுமாக சோமா எண்டர்பிரைசஸ் நிறுவன துணை தலைவர் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னையின் வானகரத்தில் இயங்கி செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான சோமா எண்டர்பிரைசஸ்_க்கு எதிராக CBI வசம் இருக்கும் நிலுவை வழக்குகளை நிறுவனத்துக்கு சாதகமாக்கி அதிலிருந்து மிளவைப்பதற்கு அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் , புரோக்கர்கள் என சந்தித்துள்ளதாக தெரிகின்றது. மேலும் உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவு 1-ல் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் என்பவரின் உதவியோடு சி.பி.ஐ_யின் ஊழல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி_யான அஸ்ரா கார்க்கை சந்தித்துள்ளார்.

அப்போது சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு எதிராக CBI வசம் உள்ள நிலுவை வழக்குகளை சாதகமாக்க ராமச்சந்திர ராவ்  பேரம் பேசி அஸ்ரா கார்க்குக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதை உடனடியாக அஸ்ரா கார்க் மூத்த அதிகாரிகளிடம் தெரிவிக்க ,CBI அதிகாரிகள் இணைந்து அவர்களின் திட்டமிட்டு ராமச்சந்திர ராவ் , உள்துறை அதிகாரி தீராஜ் சிங் , புரோக்கர் தினேஷ் சந்த் குப்தா ஆகியோர் ரூ.2 கோடி பணத்துடன் அஸ்ரா கார்க் அலுவலகத்துக்கு வரும் போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர். அவர்களிடம் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அஸ்ரா கார்க் மதுரை, தர்மபுரி மாவட்ட போலீஸ் SP_யாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |