சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதுமந்து காவல்துறையினருக்கு மார்லி மந்து பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 6 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார், ராஜேந்திரன், சிவா, புவனேஷ், சுரேஷ் மற்றும் கிஷாந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.