தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆவின் நிர்வாக ஊழியர்கள் தனியாக கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா குறையாத நிலையிலும் ஊரடங்கு தளர்வு கள் முழுமையாக விளக்கப்படாத நிலையிலும் கூட்டம் நடத்த தடைவிதித்து அனைத்து மாவட்ட ஆவின் நிர்வாக ஊழியர்களுக்கும் பால்வளத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.