தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நடைபாதை கடைகள், அடுமனைகள், இனிப்பு காரவகை கடைகள், உணவகம், தேநீர் கடைகள் நிபந்தனைகளுக்குட்பட்டு இரவு 9 மணி வரையிலும், உணவகம், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரையிலும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.