தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி https://gccvaccine.in என்ற இணையத்தளத்தில் கொரொனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மாநகராட்சியில் சுவரொட்டி அகற்றுவது தொடர்பான புகார்களை மற்றும் உதவிகளுக்கு 1913என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.