Categories
சினிமா

முதல் படம் வெளியாகும் முன்பே இயக்குநர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த இயக்குனர் பி. சேதுராமன் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 64. பல்வேறு மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், முதல் முறையாக ‘எண்டே பிரியதாமம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே சேதுராமன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |