ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதழ் ஏற்கதக்கதாகும்.
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்.
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்க வேண்டும்.
வேறு சான்றிதழ்கள்:
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது / எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு போக வேண்டும்,
• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் / நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர் – சிறுமியர்:
சிறுவர் – சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் www.passportindiagov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் புதிய பயனர்கள் (new user) என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்கள் வசதிக்கு ஏற்ப அருகாமையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்ந்து எடுங்கள். பின் உங்கள் பெயர், பிறந்த தேதி, ஈமெயில், லாக்இன் ஐடி, பாஸ்வேர்டு பின் உங்கள் விருப்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கேள்வி மற்றும் பதிலை பதிவிடுங்கள். உங்கள் பாஸ்வர்ட் மறந்துவிட்டால் இந்தக் கேள்விக்கு உண்டான பதிலை கொடுத்துக்கூட உங்கள் அக்கவுண்ட்டை லாக் இன் செய்யலாம்.
இந்தத் தகவல்கள் எல்லாம் கொடுத்த பின்பு உங்கள் பதிவு உறுதியாகும். பின் நீங்கள் கொடுத்த ஈமெயில்-க்கு ஒரு மெயில் வந்திருக்கும். அந்த மெயிலில் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது லாக்இன் ஐடி-ஐ பதிவிடவும். இதைச் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும்.
மீண்டும் லாக்இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிடவும். இதில் புதிய பாஸ்போர்ட் (apply for fresh passport) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். பின் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் தேர்வை கிளிக் செய்யவும். இதில் புதிய பாஸ்போர்ட், சாதாரண முறையா அல்லது தட்கல் முறையா மற்றும் பாஸ்ப்போர்ட்டில் 36 பக்கங்களா அல்லது 60 பக்கங்கள் வேண்டுமா என்று உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுங்கள்.
பின்னர் உங்களைப் பற்றிய விபரங்களை அளிக்கவும் அதாவது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், இந்திய குடிமகனா, வேலை செய்பவரா, பான் எண் (விருப்பம்), வாக்காளர் அடையாள எண் (விருப்பம்), படிப்பு, ஆதார் என் (கட்டாயம்). அனைத்து விபரங்களையும் ஆடையாளத்திற்காக நீங்கள் கொடுக்கும் ஆவணத்தை பொறுத்து ஓரே மாதிரியாக இருக்க வேண்டும். பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைத் தரவேண்டும் (தாய் மற்றும் தந்தை).
அவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும். அடுத்ததாக உங்கள் ஆதார் எண்ணில் இருக்கும் முகவரியைக் கொடுக்கவும் அதன் பின் உங்கள் மொபைல் எண். அடுத்து எதேனும் அவசரத்துக்குத் தொடர்புகொள்ள ஒருவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும். பின் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் இரு நண்பர்களின் விபரங்களை கொடுங்கள், இது போலீஸ் பாஸ்போர்ட் அளிக்கும் முன்பு இவர்களிடம் உங்களைப் பற்றி அறிந்துகொள்ளத் பயன்படுத்தி கொள்வார்கள்.
உங்களுக்கு இது தான் முதல் பாஸ்போர்ட்டா அல்லது இதற்கு முன்பு பாஸ்போர்ட் வைத்திருந்தீர்களா, உங்கள் மீது எதுவும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்று சில கேள்விகளுக்குப் சரியான பதிலை தேர்வு செய்யவும். அடுத்ததாக பாஸ்போர்டுக்கு உண்டான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு பின் உங்களுக்கு வசதியான தேதி மற்றும் ஊரைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் பாஸ்ப்போர்ட் அலுவலகத்திற்குச் செல்லும் போது ஆன்லைனில் உங்கள் தகவல்கள் அடங்கிய பார்ம்-ஐ எடுத்துச் செல்லவும். அங்கு உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிம் போலீஸ் வெரிஃபிகேஷனுக்கு வருவார்கள். இந்த நடைமுறைகளுக்குப் பின் 10 முதல் 15 தினங்களுக்குள் பாஸ்போர்ட் உங்களுக்கு கிடைத்துவிடும்.