Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் கடன் வாங்கியதால் போதிய அளவு வருமானமின்றி அதை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சுப்பிரமணியிடம் உடனடியாக தங்களின் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு சென்று தகராறு செய்வோம் என்று கூறியுள்ளனர். இதனால் சுப்ரமணியம் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் மனைவி தனது கணவர் வாயில் நுரை வந்த நிலையில் மயங்கி கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து  சென்று பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சுப்பிரமணியத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |