வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தடைகளை கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதை இந்திய தடகள வீரர்களின் வாழ்க்கை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை வீராங்கனை ரேவதி தனது பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தாலும் ரேவதி வெற்றி பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.