சுவிட்சர்லாந்தில் தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பகுதிகளில் உள்ள ஏரிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட புயல் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் சுற்றுச்சூழலுக்கான பெடரல் அலுவலகம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை மூன்று அளவுகளாக கணித்துள்ளது. இதில் ஆல்பைன் பகுதிகளில் உள்ள துன், பிரையன்ஸ் மற்றும் லூசெர்ன் ஏரிகள், சூரிச் ஏரி ஆகிய இடங்கள் வெள்ள அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.