கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை நினைவு பள்ளி, தேவசகாயம் மவுண்ட் ஆர்.சி. நடுநிலை பள்ளி, சுருளோடு புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, குழித்துறை, குளச்சல், அருமனை போன்ற பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நாகர்கோவில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பு முகாமில் கோவிஷீல்டு இரண்டம் கட்ட டோஸ் மட்டுமே செலுத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் நேரடியாக டோக்கன் பெறுகின்றனர். இதில் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது என்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் கொடுக்கப்பட்டு தடுப்பூசி முகாம்கள் செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜக்கமங்கலம்துறை, குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டகுழி, கோதநல்லூர் போன்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாகர்கோவில் டதி பள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி போன்றவற்றிலும் கோவிஷீல்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. மேலும் வெளிநாடு செல்பவர்களுக்கு 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.