Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு…. அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். அதன் பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று அறிவித்ததை அடுத்து அவர்கள் ரசிகர்கள் வருத்தமுற்றார். அதன்பிறகு படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை வருகின்ற இன்று  சந்திக்கவுள்ளார். அரசியலுக்கு வரவில்லை என அவர் அறிவித்த பின் மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக கூறியுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன் என்று கூறிய நிலையில், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் கோரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

Categories

Tech |