தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயந்திபுரம் பச்சையப்பன் வடக்கு பகுதியில் குள்ளபெருமாள் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் சோமநாயக்கன்பட்டி-பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பங்காள மேடு என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குள்ளபெருமாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.