பஞ்சரான டிப்பர் சக்கரத்தை கழற்றிய போது தலையில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் பகுதியில் சவுரிராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சீதாராமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் டிரைவராக இருந்துள்ளார். இவர் டிராக்டரில் டிப்பரை மாட்டி எடுத்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்திலுள்ள தேவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது வழியில் டயர் பஞ்சர் ஆனதால் சரி செய்வதற்காக டயரை சீதாராமன் கட்டியுள்ளார்.
அப்போது எதிர்பாராமல் டயர் கழன்று டயர் மற்றும் டயரில் இருந்து கம்பி சீதாராமன் தலைமீது அடித்ததில் படுகாயமடைந்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீத்தாராமன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.