டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேலபருத்தியூர் கிராமத்தில் ராஜேஷ் என்பவர் எலக்ட்ரிஷன் வேலைப்பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மேலபருத்தியூர் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் கோளாறு ஏற்பட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதனால் கோளாறை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரமாட்டார்கள் என நினைத்து மின் துண்டிப்பை சரி செய்ய ராஜேஷ் டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார்.
அப்போது ராஜேஷ் மீது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடி இருந்த ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி கீழே இறக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.