Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதோட அட்டகாசம் தாங்க முடியல…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

ஒற்றை காட்டு யானை வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அருகே உள்ள புலியூர், கணேசபுரம், அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள்  அதிகமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை யானையின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனையடுத்து அந்த ஒற்றையானை பொதுமக்களை தாக்கியும், விவசாய பயிர்களை நாசப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அஞ்சூரான் மந்தை பகுதியில் தந்தை, மகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஒற்றை யானை அவர்களை துரத்தியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் பிலாக்கு பகுதியில் ராஜாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். அந்த சமயத்தில் ராஜாஜி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனையடுத்து பிலாக்கு பகுதிக்கு வந்த யானை ராஜாஜி வீட்டை சேதப்படுத்தியதோடுஅங்கிருந்த உணவுப்பொருட்களையும் தின்றது. எனவே தனியாக சுற்றி திரியும் அந்த ஒற்றை யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டுமாறும், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |