Categories
உலக செய்திகள்

நான் நலமாக உள்ளேன்…. ஆசி வழங்கிய போப் ஆண்டவர்…. உற்சாகத்தில் மக்கள்…!!

போப் ஆண்டவர் தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு மக்களை நேரில் சந்தித்து பேசியதையடுத்து அவர்கள் மிகுந்த உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

வாடிகன் சிட்டியில் உள்ள புனித ஆலயத்தின் போப் ஆண்டவரான பிரான்சிஸ்க்கு  84 வயதாக்கின்றது. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பெருங்குடல் சுருக்கம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி  பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஓன்று பெருங்குடலின் இடதுபக்கம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து போப்புக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் போப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் உள்ள பால்கனியில் மக்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது போப் மக்களுக்கு பிரார்த்தனை  மற்றும் ஆசிகளையும் வழங்கியுள்ளார். அவர் 10 நிமிடத்திற்கு மேலாக மக்களிடம் பேசியதை அடுத்து  மருத்துவமனை ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் பல நாட்களுக்கு பிறகு போப் ஆண்டவரை நேரில் கண்ட மக்கள் மிகுந்த உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |