கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் கணேசன் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் வைத்து மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த கணேசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.