Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரியசாமி என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியகரை காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பணி முடித்து விட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து பெத்தநாயக்கன் பாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது அங்குள்ள ஒரு வளைவில் பெரியசாமி மோட்டார் சைக்கிளை திருப்ப முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி பெரியசாமி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |