புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வசிக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்த்தி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறியதால் ரஞ்சித்குமார் அவரை கோத்தகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பிறகு ஆர்த்தி ஓரிரு நாட்கள் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருகிறேன் என்று கூறியதால் ரஞ்சித்குமார் மீண்டும் கோயமுத்தூர் கிளம்பி விட்டார்.
இதனையடுத்து ரஞ்சித்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஆர்த்தி தன்னை அழைக்க வருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரஞ்சித்குமார் அங்கு சென்ற போது ஆர்த்தி தனது பெற்றோரை விட்டு பிரிந்து வர விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோத்தகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனார்.