நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் அதிகமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுந்தம்பட்டி வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்த மானை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி வனத்துறையினர் செல்வேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின்னர் வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளிமானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அந்த புள்ளிமானை கொப்பனாபட்டி வனச்சரக அலுவலகம் அருகில் புதைத்தனர்.