கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அதிகமாக போடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஓன்றாகும். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்காவில் மாடர்னா, பைசர், ஜான்சன் & ஜான்சன் மற்றும் பயோஎன்டேக் போன்ற தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதுவரை அமெரிக்காவில் சுமார் 33,35,65,404 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி வெளியான செய்தி படி அமெரிக்காவில் இதுவரை 18, 38, 36, 917 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 15,89,54,417 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தமாக 33, 29, 66, 409 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.