Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தான் வைத்தேன்… திடீரென பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி அடைந்த விவசாயி…!!

தண்ணீர் குடித்த சில வினாடிகளிலேயே பசு கன்றுகுட்டி மற்றும் ஆடுகள் இறந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிகுளம் பகுதியில் செல்லையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக சில ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் செல்லையா தனது வீட்டின் முன்பகுதியில் உள்ள வேப்பமரத்து நிழலில் பசுங்கன்று மற்றும் ஆடுகளை கட்டிய பிறகு அவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வைத்துள்ளார்.

இதனையடுத்து பசுங்கன்று மற்றும் மாடுகள் தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே திடீரென மூன்று ஆடுகள் மற்றும் ஒரு பசுங்கன்றுகுட்டி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லையா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  அதன்பிறகு காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ஆடு மற்றும் பசு கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்த பிறகு அப்பகுதியில் குழிதோண்டிப் புதைத்து விட்டனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |