60 ஆண்டுக்கால நட்பினை பாராட்டி இரு நாட்டு அதிபர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
உலகிலுள்ள பல்வேறு நாடுகள் அணு ஆயுத விவாதத்திற்காக வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வடகொரியாவின் ஒரே முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனா நட்பு பாராட்டி வருகின்றது. இந்த நட்புறவு ஆனது 1930களில் சீனாவில் நடந்த காலனித்துவ போருக்கு எதிராக வட கொரியாவின் கொரில்லா படைகள் சீனாவுடன் கைகோர்த்துக் கொண்டன. மேலும் 1950 முதல் 53 வரை நடந்த கொடிய போரில் வடகொரியாவுக்கு சீனா ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து 1961ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சீனா மற்றும் வட கொரியா இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் எவரேனும் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஒருவருக்கொருவர் இராணுவ மற்றும் பிற உதவிகளை வழங்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டனர். இந்த சூழலில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தமானது 60 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இதனால் இரு நாட்டு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் இருநாட்டு இடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் , சீன அதிபர் ஜின்பிங்க்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்தச் செய்தியில் “இருதரப்பு நாடுகளுக்கு இடையேயான நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமானது இருநாடுகளின் சோஷலிசத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் விரோத சக்திகளின் சவாலை எதிர் கொள்வதிலும் முனைப்பு காட்டி வருவதோடு இருநாடுகளின் உறவையும் பலப்படுத்துவது மிகவும் அவசியம்” என தெரிவித்துள்ளார். இதேபோல் சீன அதிபர் ஜின்பிங் வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு எழுதிய செய்தியில் “இருநாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை தர உள்ளதாகவும் சீனா மற்றும் வட கொரியா இடையில் உள்ள உறவுகளை சரியான திசையில் முன்னேற்றத்திற்காக இட்டுச் செல்வேன் என்றும் நட்பு மற்றும் ஒத்துழைப்பை சீராக வழிநடத்துதல் மூலம் இரு நாடுகளின் உறவை புதிய பாதைக்கு எடுத்துச் செல்வேன்” என்றும் கூறியுள்ளார்.