Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்!!!

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான  பொருட்கள்  :

சின்ன உருளைக்கிழங்கு –  10

இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1  ஸ்பூன்

எலுமிச்சை – 1

சோம்பு –  1/4 ஸ்பூன்

கரம்மசாலாத்தூள் – 1/2  ஸ்பூன்

சீரகம் – 1/4 ஸ்பூன்

உளுந்து –  1/4 ஸ்பூன்

கடுகு –   1/4 ஸ்பூன்

பூண்டு – 3 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் –   தேவையான அளவு

baby Potato fry க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து  தோலை உரித்துக் கொள்ள  வேண்டும் . பின்னர்  சோம்பு  மற்றும்   சீரகத்தை   வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு கிண்ணத்தில் இஞ்சி  பூண்டு விழுதுடன், எலுமிச்சைச்சாறு, கரம் மசாலாத் தூள் மற்றும் அரைத்த சோம்பு விழுது சேர்த்துக்  கலந்து இதனுடன்  வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும். ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி  உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி  சீரகம், சோம்பு, உளுந்து, கடுகு, இடித்த பூண்டு போட்டு நன்றாக வதக்கி, பொரித்த உருளைக்கிழங்கை இதில் சேர்த்துக்கிளறி இறக்கினால் சுவையான  கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல் தயார் !!!

Categories

Tech |