நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதால், முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும். நாட்டின் மொத்த சராசரி ஒன்றுக்கும் கீழ் உள்ளது. ஆனால் கடந்த 15 நாட்களில் அது உயர்ந்துள்ளது. நமக்கு விடுக்கும் எச்சரிக்கை ஆகும் என்று கூறியுள்ளனர்.