அமெரிக்காவில் உள்ள வர்ஜின் கேலக்டிக் நிறுவனம், விஎஸ்எஸ்யூனிட்டி விண்கலத்தில் 5 நபர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
நியூ மெக்சிகோவிலிருந்து, வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தினுடைய நிறுவனரான, ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா பந்த்லா என்ற 34 வயது பெண் மற்றும் 3 நபர்கள் சேர்ந்து குழுவாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நியூமெக்சிகோவின் ஏவுதளத்திலிருந்து காலை சுமார் 8:40 மணியளவில் இவர்கள் விண்கலத்தில் புறப்பட்டுள்ளனர். மேலும் ஏவுதளத்திலிருந்து சென்ற இரட்டை விமானமானது, 50,000 அடிகள் சென்ற பின்பு யூனிட்டி 22- என்ற விண்கலத்தை விடுவிப்பார்கள். அதன் பின்பு இந்த விண்கலத்தின் ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் செயல்படத் தொடங்கும். அதனையடுத்து விண்வெளிக்கு சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.