தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொங்கு நாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். கொங்கு நாடு என்று பிரிவினை வந்தால் தமிழகத்தில் அமைதி பாதிக்கும். யாரையோ சிறுமைப்படுத்த வேண்டாம் என்பதற்காக பாஜகவினர் கொங்குநாடு என கூறியிருக்கிறார்கள். தனிநபர் கருத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.