தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வர்த்தக நிறுவன பகுதிகளில் சமூக இடைவெளி இன்றி கூடும் பொது மக்களால் நோய் தோற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.