Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் வாங்கிட்டு வரேன்” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவரான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிரன் குமாருக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை தனது மகளை அழைத்து வருவதற்காக மில்லுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அந்த சிறுமி திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆம்புலன்ஸ் டிரைவரான குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த மாதம் ஒரு கோவிலில் வைத்து கிரண்குமார் அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் கிரண் குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |