Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உடனே வையுங்க… அ.தி.மு.க.வினர் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த திறப்புவிழா கல்வெட்டை  அகற்றியதால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் தற்போது கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதன் நுழைவு பகுதியில் கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது. அந்தக் கல்வெட்டில் கடந்த 2001 ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ. சண்முகநாதனால்  திறந்து வைக்கப்பட்டது என்று எழுதியிருந்ததால் அதை எடுத்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்றிணைந்து திடீரென அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், என பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் எனவும், கல்வெட்டை அகற்றியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு அதிகாரிகள் அந்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். அதன்படி அந்தக் கல்வெட்டு அதே இடத்தில் வைத்த பிறகும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்  கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளனர்.  இதனால் அதிகாரிகள் மீண்டும் அவர்களிடம் கேட்டபோது கல்வெட்டு அகற்றியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |