மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பட்டி கிராமத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் 15 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி திடீரென மாயமானார். இதனை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சவுந்தர்ராஜனின் மகனான மனோஜ் குமார் என்பவர் மாணவியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த மாணவியை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டானர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் மனோஜ் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.