சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கண்மாயில் மணல் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆதியூர் கண்மாயில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து டிரைவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த அந்த டிராக்டரை காவல்துறையினர் மணலுடன் பறிமுதல் செய்ததோடு டிரைவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.