Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா செய்யணும்…? கடையில் தொங்கிய சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

வயிற்று வலி காரணமாக கார் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளத்தான்மனை கிராமத்தில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக கார் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது கடையில் இளஞ்செழியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின் சுகந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வயிற்றுவலி காரணமாக இளஞ்செழியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |