குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த அருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சல் இருந்த அருண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.