Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நல்ல முறையில் இயக்க வேண்டும்” நடுவழியில் நின்ற பேருந்து… சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

நடு வழியிலேயே பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி தள்ளியவுடன் பேருந்து இயங்கி விட்டது. இவ்வாறு பேருந்து நடுவழியில் நின்றதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பேருந்தை பழுது பார்த்து நல்ல முறையில் இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |