தேங்காய் லட்டு
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
சீனி – 1/2 கப்
பதாம் பருப்பு – 10
பட்டர் – 1 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை :-
முதலில் ஒரு கடாயில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு , துருவிய தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சீனி ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி , திரண்டு வரும் போது இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி உருண்டைகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைத்து பரிமாறினால்
சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!