Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஜோராக நடைபெற்ற விற்பனை…. லாபத்தை கொடுக்கும் வாத்துகள்…. மகிழ்ச்சியடைந்த தொழிலாளர்கள்….!!

வாத்து முட்டைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி, கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வாத்து பண்ணைகள் இருந்து வருகிறது. இந்த பண்ணைகளில் உள்ள வாத்துகள் மேய்ச்சலுக்காக தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள   மேல செம்மங்குடி பகுதிக்கு கடலூரிலிருந்து 1500 வாத்துக்கள் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்த வாத்துகள் தினசரி 1000 – க்கும் மேற்பட்ட முட்டைகள் இடுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த  வாத்து முட்டைகளை மொத்தமாக விற்பனைக்கு தஞ்சை மற்றும் பிற நகரங்களுக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் ஒரு வாத்து முட்டை 7 ரூபாய்க்கும், ஒரு கிலோ கறி 200  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு அதிக லாபம் வருகிறது என வாத்து மேய்க்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வாத்து முட்டை, கறிகளுக்கு மக்கள் மத்தியில் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கடலூரில் தொழிலாளர்கள் கூறும்போது வாத்துகளை மேய்ச்சலுக்காக நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளுக்கு கொண்டு வருவோம் எனவும், வயலில் நடும் காலம் வந்துவிட்டால் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |