பிரண்டைத் துவையல்
தேவையான பொருட்கள் :
பிரண்டை – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
மிளகு – 25
பச்சை மிளகாய் – 2
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, சுத்தம் செய்து நெய்விட்டு வதக்க வேண்டும். பிரண்டை நன்றாக வதங்கியதும் சின்ன வெங்காயம் , மிளகு ,பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, ஆறியதும் அரைத்தெடுத்தால் சத்துக்கள் நிறைந்த பிரண்டைத் துவையல் தயார் !!!