Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க…. பிரதமர் மோடி உத்தரவு…!!

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்த 68 குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |