மகரம் ராசி அன்பர்களே.! அதிகப்படியான உழைப்பு இருக்கும்.
இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டம தினம் தொடங்க இருப்பதினால் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மாற்றுக் கருத்துடையோரிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருடைய விவகாரங்களிலும் தலையிட வேண்டாம். முயற்சிகள் ஓரளவு நல்ல பலன் இருக்கும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். எடுத்த முயற்சி கண்டிப்பாக கைகூடி விடும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உங்களிடம் இருக்கின்றது.
அதனால் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் சிறப்பாக உங்களால் கையாள முடியும். மனோதைரியம் கூடிவிடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். வீண்பழி சுமத்த நேரிடும். கோபத்தை தவிர்த்து விடுங்கள். காதல் கைகூடும். காதலில் பிரச்சனைகளும் சிரமங்களும் இருந்தால் அனைத்தும் இப்பொழுது சரியாகிவிடும். சந்திராஷ்டம தினங்கள் இருப்பதினால் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செலுத்த வேண்டாம். கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்தினால் உயர முடியும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள்