Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! லாபம் இருக்கும்….! மன வருத்தங்கள் இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

இன்று குடும்ப முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். நட்பு மத்தியில் நல்ல பெயர் இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தையும் உங்களால் பூர்த்தி செய்து கொடுக்க முடியும். எதிர்பார்த்த லாபம் இருக்கும். தொழிலை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் சிந்தனை இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். தொட்டது துலங்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்கக்கூடிய சூழல் இருக்கின்றது. மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். குடும்ப பொறுப்புகளை உணர்ந்து எதையும் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு பேச வேண்டும். தேவையில்லாத மன வருத்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு மன வருத்தங்களை அதிகப்படுத்த வேண்டாம். காதல் பிரச்சனையாக  இருந்தாலும் அது சரியாகிவிடும். அந்த நினைப்புடன் எதிலும் ஈடுபட வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் காதல் கைகூடி திருமணத்தில் சென்று முடியக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும். படிப்பை தவிர வேறு எதிலும் அக்கறை செலுத்த வேண்டாம். மேற்கல்விக்கான முயற்சியில் கண்டிப்பாக நல்ல சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |