Categories
தேசிய செய்திகள்

12 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி… வெளியான தகவல்…!!!

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டின் கீழ் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜைடோஸ் காடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாடு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை 1 முதல் ஜைகோவ்-டி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் அடிப்படையில் திருப்திகரமான முடிவு வெளியானதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 28 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளதால் அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அனுமதிப்பது குறித்து இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருகின்றது.

Categories

Tech |