Categories
உலக செய்திகள்

“நரகத்தில் இறக்க தயாராகுங்கள்”… பாம்பு, முதலைகளை வைத்து மோடியை மிரட்டிய பாக் பாடகி..!!

பிரதமர்  மோடியை பாம்பு மற்றும் முதலைகளை வைத்து மிரட்டிய வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றிய பாகிஸ்தான் பாப் நட்சத்திரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி  ரபி பிர்சாடா (Rabi Pirzada) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை மிரட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். , முதலை, நான்கு மலைப்பாம்புகள் மற்றும் பாம்புகள் இந்திய பிரதமருக்கு “சிறப்பு பரிசுகள்” என்று கூறி, அவருக்கு விருந்து அளிப்பதாக அவர் கூறினார்.

Image result for Why am i being questioned on the video of threat to Modi after it got viral?

அதில் அவற்றை குறிப்பிட்டு பேசும் அவர்  “நான், ஒரு காஷ்மீர் பெண்மணி, இந்தியாவுக்காக தனது பாம்புகளுடன் தயாராக இருக்கிறேன். இந்த பரிசுகள் உண்மையில் மோடிக்குரியவை. நீங்கள் காஷ்மீர் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள், எனவே இதுதான் நான் உங்களுக்காக தயார் செய்துள்ளேன். எனவே, நரகத்தில் இறக்க தயாராகுங்கள், சரியா? என் நண்பர்களும் நரகத்தில் உங்களுக்கு விருந்து அளிப்பார்கள், “என்று அவர் கூறினார்.

Image result for Why am i being questioned on the video of threat to Modi after it got viral?

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது.  ரபி பிர்சாடா தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோவை பதிவேற்றியதோடு, ஒரு தனியார் சேனலால் ஒளிபரப்பப்பட்ட நிலையில், பஞ்சாப் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு  விலங்குகளை வைத்திருப்பதற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. வனவிலங்கு சட்டத்தை மீறியதற்காக ரபி  பிர்சாடாவுக்கு  லாகூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |