வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பானுகோபன் என்பவர் பஸ் அதிபராக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினருடன் வேலூர் சென்றுள்ளார் . இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 84 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கமாக வீட்டு வேலைக்கு வரும் கோகிலா என்ற பணிப்பெண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் அவர் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு போலீசாருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை தடயங்களை சேகரித்தார். இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.