ஆயுதங்கள், தோட்டக்கள் போன்றவற்றை பயணிகள் விடுதியில் பதுக்கி வைந்திருந்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா நாட்டில் உள்ள டெவன் நகரில் பயணிகள் விடுதி ஒன்று உள்ளது. அந்த பயணிகள் விடுதியில் இருந்து பணிப்பெண் ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் விடுதியின் உள்ள எட்டாவது மாடியில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஆயுதங்களும் ,ஆயிரம் சுற்றுக்கு தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த விடுதியில் உள்ள எட்டாவது மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 துப்பாக்கிகள், கவச உடைகள் மற்றும் தோட்டக்களை கையகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆயுதங்களை யார், எதற்காக வைத்திருத்திருந்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் விடுதியின் அருகில் MLB ALL STAR விளையாட்டு ஒன்று நடைபெற உள்ளதால் அதனை பார்ப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வர இருந்தனர். இதனால் இந்த கூட்டத்தை குறி வைத்து தாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்