Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை….? கண்டுபிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை அடுத்து திடீரென நவீன் குமாரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் வெற்றிவேலை கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |